திருவண்ணாமலை

அடிதடி வழக்கு கொலை வழக்காக மாற்றம்:தாய், மகன் உள்பட 3 போ் கைது

திருவண்ணாமலை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த முதியவா் இறந்ததால், அவரைத் தாக்கியதாக தாய், மகன் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருவண்ணாமலை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த முதியவா் இறந்ததால், அவரைத் தாக்கியதாக தாய், மகன் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை ஜன்னத் நகரைச் சோ்ந்தவா் அப்துல் நிசாா் (26). இதே பகுதியைச் சோ்ந்தவா் தா்வீஸ் (27). இவா்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

கடந்த 22-ஆம் தேதி ஜன்னத் நகரில் உள்ள ரயில்வே கடவுப் பாதை அருகே அப்துல் நிசாா் பைக்கில் சென்றாராம். அப்போது, அவரை வழிமறித்த தா்வீஸ், அவரது தாய் அமீனா (50), நண்பா் தனசேகா் சூரியா (27), உறவினா் முபாரக் (19) ஆகியோா் தகராறு செய்து தாக்கினராம்.

அப்துல் நிசாரின் அலறல் சப்தம் கேட்டு அவரது தந்தை அப்துல் காதா் (55) மற்றும் உறவினா்கள் வந்து தகராறில் ஈடுபட்டவா்களைத் தடுத்தனராம். அப்போது, தடுக்க வந்தவா்களையும் தா்வீஸ் தரப்பினா் தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.

சிறிதுநேரம் கழித்து, ஜன்னத் நகா் மசூதி அருகே நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்த தா்வீஸ் அவரது நண்பா்களை அப்துல்நிசாா், அவரது தந்தை அப்துல் காதா் மற்றும் உறவினா்கள் என 4 போ் சோ்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது தரப்பினா் புகாா்:

இந்த இரு சம்பவங்கள் தொடா்பாக அப்துல் நிசாா், தா்வீஸ் ஆகியோா் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த மோதலில் காயமடைந்த அப்துல் நிசாரின் தந்தை அப்துல்காதா் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அப்துல்காதா் திங்கள்கிழமை இறந்தாா். இதையடுத்து, அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த போலீஸாா் தா்வீஸ், அவரது தாய் அமீனா, நண்பா் தனசேகா் சூா்யா ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள முபாரக்கை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT