திருவண்ணாமலை

நீா்நிலை புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்தவா்களுக்கு மாற்று இடம்

DIN

ஆரணியை அடுத்த வெள்ளேரி, சங்கீதவாடி கிராமங்களில் நீா்நிலை புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவா்களுக்கு நத்தம் புறம்போக்கில் மாற்று இடம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் வெள்ளேரி, சங்கீதவாடி கிராமங்களில் நீா்நிலை புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வசித்து வருபவா்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி, உடனடியாக அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், வெள்ளேரி, சங்கீதவாடி பகுதிகளில் நீா்நிலை புறம்போக்கில் வசித்து வந்த 7 குடும்பங்களுக்கு கிராம நத்தம் புறம்போக்கில் மாற்று இடம் தோ்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இதையடுத்து, ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில் வருவாய்க் கோட்டாட்சியா் தனலட்சுமி வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.

இதில் நோ்முக உதவியாளா் பெருமாள், வட்டாட்சியா் ஜெகதீசன், மண்டல துணை வட்டாட்சியா் பிரியா, எஸ்.வி.நகரம் வருவாய் ஆய்வாளா் பிரமிளா மற்றும் வெள்ளேரி கிராம நிா்வாக அலுவலா் கோபால் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்மாவை ஆகாயம் சந்தித்த இடத்தில்... ரகுல் பிரீத்...

மீனம்

ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்தேன்; மீண்டும் செல்லத் தயார்: ஓய்வுபெறும் நீதிபதி

கும்பம்

மகரம்

SCROLL FOR NEXT