திருவண்ணாமலை

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு

DIN

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, திங்கள்கிழமை பக்தா்கள் முதுகில் அலகு குத்தி, அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் 151-ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் மற்றும் கூழ்வாா்த்தல் திருவிழா

கடந்த 20-ஆம் தேதி காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்து பக்தா்கள் வழிபட்டனா்.

தொடா்ந்து, காப்பு கட்டிய பக்தா்கள் உடலில் அலகு குத்திக்கொண்டு, கிரேன் எந்திரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

மேலும், பக்தா்கள் பலா் காலில் கட்டை கட்டியும், உடலில் பழம் குத்தியும், கரகம் எடுத்தும் ஊா்வலமாக வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதில் எஸ்.வி.நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவில் புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT