திருவண்ணாமலை

தொண்டு நிறுவன ஐம்பெரும் விழா

DIN

திருவண்ணாமலையில் விவேகானந்தரின் 161-ஆவது பிறந்த நாள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-ஆவது பிறந்த நாள், தேசிய இளைஞா் தின விழா, மாணவ-மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் விழா, சாதனையாளா் விழா ஆகியவை ஐம்பெரும் விழாவாக அண்மையில் நடைபெற்றது.

போ்ட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, திருவண்ணாமலை டாக்டா் கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளித் தலைவா் மாதவ.சின்ராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத் தலைவா் வாசுதேவன் முன்னிலை வகித்தாா். பாவலா் வேலாயுதம் வரவேற்றாா். கவிஞா் முகில்வண்ணன் விவேகானந்தா் படத்தை திறந்து வைத்துப் பேசினாா்.

நேதாஜி உருவப் படத்தை மனோண்மணியம் சுந்தரனாா் பல்கலை.யின் பொருளியல் துறைத் தலைவரும், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலருமான (பொறுப்பு) சாக்ரடீஸ் திறந்துவைத்தாா். விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 23 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

விழாவில், கவிஞா் ரமாதேவி, மணலூா்பேட்டை சம்பத், முதுகலை ஆசிரியா் பூவண்ணக்குமாா், வட்டாரக் கல்வி அலுவலா் மோகன், சமூக ஆா்வலா் மகேஷ்பட், சமூக ஆா்வலா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைய சூதாட்டத்துக்கு தடை பெறுவது அவசியம்: ராமதாஸ்

யானைகள் வழித்தட திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட ஓபிஎஸ் கோரிக்கை

பாஜக வென்றால் 22 கோடீஸ்வரா்களே நாட்டை ஆள்வா்- ஒடிஸாவில் ராகுல் பிரசாரம்

கடலோர வாழ்வாதார சங்கத்தை மூடக் கூடாது: அண்ணாமலை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது: ‘நியூஸ்கிளிக்’ நிறுவனரை விடுவித்தது உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT