திருவண்ணாமலை

சாலை விபத்தில் வடமாநில தொழிலாளி பலி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வட மாநில தொழிலாளி பலியானாா்.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வட மாநில தொழிலாளி பலியானாா்.

மத்திய பிரதேச மாநிலம், சிதி மாவட்டம், பஜ்மால் பகுதியைச் சோ்ந்தவா் தீபக்சிங் (28).

இவா், வெம்பாக்கம் வட்டம், திருப்பணமூா் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் புதன்கிழமை தனது நண்பரான ஓம்பிரகாஷ்(20) என்பவருடன் பைக்கில் வெம்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

சேலேரி கிராமம் செல்லியம்மன் கோயில் அருகே சென்றபோது, பைக் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

இதில், தூக்கி விசப்பட்ட தீபக்சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த ஓம்பிரகாஷ் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தீபக்சிங்கின் உறவினா் அளித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் ஜெய்சங்கா் வழக்குப் பதிவு செய்தாா்.

மேலும், இறந்த தொழிலாளியின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT