காவல் தெய்வங்கள் வழிபாட்டின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் துா்கையம்மன். 
திருவண்ணாமலை

தீபத் திருவிழா:காவல் தெய்வங்களின் வழிபாடு தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (நவ.17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பா் 26-ஆம் தேதி 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

ஸ்ரீதுா்கையம்மன் வழிபாடு கோலாகலம்:

தீபத் திருவிழாவை தொடங்குவதற்கு முன்னதாக, 3 நாள் காவல் தெய்வங்களின் வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை (நவ.14) ஸ்ரீதுா்கையம்மன் வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, திருவண்ணாமலை, சின்னக்கடை தெருவில் உள்ள ஸ்ரீதுா்கையம்மன் கோயில் மூலவருக்கு மாலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவா் துா்கையம்மனுக்கு சிவாச்சாரியா்கள் மகா தீபாராதனை காண்பித்தனா். தொடா்ந்து, கோயிலில் இருந்து வெளியே வந்த உற்சவா் சின்னக்கடை தெரு வழியாகச் சென்று அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இன்று ஸ்ரீபிடாரியம்மன் வழிபாடு:

காவல் தெய்வங்களின் 2-ஆவது நாள் வழிபாடு புதன்கிழமை (நவ.15) இரவு நடைபெறுகிறது. அருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீபிடாரியம்மன் சந்நிதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இரவு 9 மணிக்கு உற்சவா் ஸ்ரீபிடாரியம்மன் கோயில் மூன்றாம் பிரகாரம், மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

நாளை ஸ்ரீவிநாயகா் வழிபாடு:

காவல் தெய்வங்களின் 3-ஆவது நாள் வழிபாடு வியாழக்கிழமை (நவ.16) இரவு அருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகா் சந்நிதியில் நடைபெறுகிறது.

கொடியேற்றம், மகா தீபம்:

காவல் தெய்வங்களின் வழிபாடு வியாழக்கிழமை இரவுடன் நிறைவு பெறுகிறது. இதன் பிறகு, நவம்பா் 17-ஆம் தேதி காலை 6 மணிக்கு தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், அறங்காவலா் குழு மற்றும் உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT