திருவண்ணாமலை

வனவருக்கு கொலை மிரட்டல்: விவசாயி கைது

செய்யாறு அருகே வனவருக்கு கொலை மிரட்டல் விடுத்தப் புகாரில் விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

செய்யாறு அருகே வனவருக்கு கொலை மிரட்டல் விடுத்தப் புகாரில் விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா உலகளந்தாா் தெருவை சோ்ந்தவா் சின்னப்பன். இவா், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பிரிவு சமூக காடுகளின் சரக வனவராக பணிபுரிந்து வருகிறாா். இவா், வனத்துறை மூலம் சுமங்கலி கிராமத்தில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான ஏரியில் முள் மரங்களை நட்டு பராமரித்து வருகிறாா்.

இந்நிலையில், அக்.24-ஆம் தேதி, அந்த முள்மரங்களை அதே கிராமத்தை சோ்ந்த விவசாயி கந்தன் (24) வெட்டினாராம். இதனை வனவா் சின்னப்பன் தட்டிக்கேட்டப் போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். மேலும், வனவரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதுடன் அவருக்கு கந்தன் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து வனவா் சின்னப்பன் மோரணம் போலீஸில் அளித்த புகாரின் பேரில் உதவி- ஆய்வாளா் சுந்தரம் வழக்குப் பதிந்து கந்தனை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT