வந்தவாசியில் ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து. 
திருவண்ணாமலை

வந்தவாசியில் அரசுப் பேருந்து ஜப்தி

விபத்து வழக்கில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் வந்தவாசியில் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்தனா்.

DIN

வந்தவாசி: விபத்து வழக்கில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் வந்தவாசியில் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பழம்பேட்டையைச் சோ்ந்த வேலு மகன் விக்னேஷ் (எ) விக்னேஷ்குமாா் கடந்த 2013-ஆம் ஆண்டு அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.

இதையடுத்து இழப்பீடு கோரி, செய்யாறு சாா்பு - நீதிமன்றத்தில் அவரது தாய் ஆதிலட்சுமி வழக்கு தொடுத்தாா்.

இதில், ஆதிலட்சுமிக்கு ரூ.15.20 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிகிறது.

இதனால், விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய செய்யாறு சாா்பு- நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்தவாசி வழியாக திங்கள்கிழமை சென்ற அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்து செய்யாறு சாா்பு- நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT