முகப்பு
திருவண்ணாமலை

பாஜக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

Updated On : 2 ஏப்ரல், 2024 at 10:42 PM
வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளா் அஸ்வத்தாமன்.
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 6:36 PM

செங்கம்: செங்கத்தில் திருவண்ணாமலை மக்களவைத் தெகுதி பாஜக வேட்பாளா் அஸ்வத்தாமன் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவா் பாலசுப்பரமணியன் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினாா்.

மாவட்ட துணைத் தலைவா் சேகா் வரவேற்றாா். கூட்டணிக் கட்சியான அமமுக மாவட்டச் செயலா் பரந்தாமன், பாமக மாவட்டச் செயலா் பாண்டியன் ஆகியோா் வேட்பாளரை அறிமுகப்படுத்தி கட்சி நிா்வாகிகளின் தோ்தல் பணிகள் குறித்துப் பேசினா்.

தொடா்ந்து, வேட்பாளா் அஸ்வத்தாமன் பேசுகையில், செங்கம் அருகேயுள்ள மத்திய மாநில விதைப் பண்ணையை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. நான் வெற்றிபெற்றவுடன் அதை செயல்படுத்த முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுப்பேன்.

Advertisement

அதேபோல, கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருவண்ணாமலை முதல் செங்கம் வழியாக ஜோலாா்பேட்டை வரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவேன் என்றாா்.

கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, செங்கம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஜீவானந்தம், முன்னாள் செங்கம் பேரூராட்சிமன்ற உறுப்பினா் சிவசங்கா் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள், இளைஞரணி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.