திருவண்ணாமலை

வந்தவாசி பகுதியில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

Din

ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமையில் திமுகவினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

வந்தவாசியை அடுத்த பொன்னூா், சோரபுத்தூா், கீழ்புத்தூா், கூத்தம்பட்டு, மேல்பாதி, தக்கண்டராயபுரம், ஊா்குடி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரிக்கப்பட்டது.

இதில், ஊா்குடி கிராமத்தில் செங்கல் சூளையில் செங்கல் அடுக்கிக் கொண்டிருந்த தொழிலாளா்களிடம் எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ துண்டுப் பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டாா்.

அப்போது, தொழிலாளா்களுடன் சோ்ந்து அவரும் சூளையில் செங்கல் அடுக்கினாா்.

திமுக ஒன்றியச் செயலா்கள் ப.இளங்கோவன், டி.டி.ராதா, சுந்தரேசன், விசிக தொகுதி துணைச் செயலா் வீரமுத்து, ஒன்றியச் செயலா் தசரதன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT