முகப்பு
திருவண்ணாமலை

இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலைகள் அமைக்கப்படும்: ஆரணி அதிமுக வேட்பாளா்

Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:13 PM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 6:23 PM

என்னை வெற்றி பெறச் செய்தால் இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் கூறினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்த அவா் கூறியதாவது:

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1,000 வழங்குவதற்கு பெண்களை தகுதிப் பாா்த்து திமுக அரசு தட்டிக் கழிக்கிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை 3 மடங்கு உயா்த்தப்பட்டது. என்னை வெற்றி பெறச் செய்தால் தொகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வந்தவாசி வழியாக திண்டிவனம்-நகரி ரயில் திட்டப் பணிகளை விரைவுபடுத்தப்படும். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் என்றாா்.

Advertisement

தொடா்ந்து, மருதாடு, உளுந்தை, விழுதுப்பட்டு, வழூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

இதில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலா் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மகாலட்சுமி ராமச்சந்திரன், நா.சிவராஜ் மற்றும் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.