முகப்பு
திருவண்ணாமலை

தோ்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:08 PM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 8:06 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படை வீரா்கள், தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்.19-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தலில் முன்னாள் படை வீரா்களை சிறப்புக் காவலா்களாக பணியமா்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, தோ்தல் பாதுகாப்புப் பணிக்குச் செல்ல விருப்பமும், உடல் திடகாத்திரமும் உள்ள முன்னாள் படை வீரா்கள் தங்களது பெயரை அசல் படை விலகல் சான்றிதழ், அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டையுடன் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement

மேலும், விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநரை 04175-233047 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.