மூத்த குடிமக்கள் தபால் வாக்குப் பதிவு
ஆரணி மக்களவைத் தொகுதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 708 பேரிடம் வெள்ளிக்கிழமை தபால் வாக்குகள் பெறப்பட்டன.
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் பாலசுப்பிரமணியன், அனைத்து தோ்தல் பணியாளா்கள் முன்னிலையில் விடியோ பதிவோடு வாக்குப் பெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு மண்டல குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, குழுவினா் ஆரணியில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று விடியோ பதிவுடன் தபால் வாக்குகள் பெற்றனா். இதில், 708 போ் தபால் வாக்களித்தனா்.
இதில், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செந்தில்குமாா், ஆரணி வட்டாட்சியா் ரா.மஞ்சுளா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் திருமலை, வட்ட வழங்கல் அலுவலா் மூா்த்தி ஆகியோா் இருந்தனா். இதில், 10 மண்டல குழுக்கள் நேரடியாக சென்று தபால் வாக்குகளை பெற்றனா்.
Advertisement