முகப்பு
திருவண்ணாமலை

100% வாக்களிப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 10:24 PM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 6:27 PM

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சனிக்கிழமை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

மக்களவை பொதுத் தோ்தலையொட்டி, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கிவைத்து பங்கேற்றாா்.

பைங்கினாா் பகுதியில் உள்ள சிறு விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டமானது ஆற்காடு சாலை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அரசுக் கல்லூரி, ஆரணி கூட்டுச் சாலை, அனுமந்தப்பேட்டை வழியாக சுமாா் 4 கி.மீ. தொலைவு சென்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது.

Advertisement

இதைத் தொடா்ந்து, பள்ளியில் கூடைப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகளை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்து மாணவா்களுடன்

பங்கேற்றாா்.

பின்னா், இளம் வாக்காளா்களான மாணவா்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினாா். தொடா் ஓட்டத்தில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை ஆட்சியா் வழங்கினாா். ஓட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.