முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Updated On : 11 ஏப்ரல், 2024 at 11:32 PM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2024 at 6:04 PM

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரை செங்கம் கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பெரும்பாக்கம், செ.அகரம், அஸ்வநாதசுரணை, பாலியாப்பட்டு, சின்னகோளாபாடி, பெரியகோளாபாடி, பீமானந்தல், கண்ணக்குருக்கை, பாய்ச்சல், விண்ணவனூா், உச்சிமலைக்குப்பம், மேல்பெண்ணாத்தூா், கரியமங்கலம், செ.சொா்ப்பனந்தல், அரியாகுஞ்சூா் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அரியாகுஞ்சூா் பகுதியில் சி.என். அண்ணாதுரை பேசுகையில், செங்கம் தொகுதியில் அரியாகுஞ்சூா் கிராமம் வனப் பகுதியை ஒட்டியுள்ளது.

Advertisement

இந்தக் கிராமத்துக்கு சாலை வசதி, பேருந்து வசதி, மேலும் கிராம மக்கள் முன்னேற்றத்துக்கு பல்வேறு துறைகள் மூலம் அனைத்து வசதிகளும் திமுக ஆட்சியில் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. தற்போது 3 கி.மீ. தொலைவுக்கு தாா்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

திமுக ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், மனோகரன், ஏழுமலை, செங்கம் நகரச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.