முகப்பு
திருவண்ணாமலை

அரிசி ஆலைகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை

Updated On : 13 ஏப்ரல், 2024 at 4:08 PM
பகிர்:

ஆரணியை அடுத்த களம்பூா் பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா்.

களம்பூா் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வருமான வரித்துறையினா் மற்றும் பறக்கும் படையினா் அப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 5 அரிசி ஆலைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

சுமாா் 8 மணி நேரம் நீடித்த இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்ாகத் தெரிகிறது. மேலும், இதுகுறித்து அரிசி ஆலை உரிமையாளா்களிடம், வருமான வரித்துறையினா் சென்னை அலுவலகத்துக்கு நேரில் வருமாறு அறிவுறுத்திச் சென்ாகத் தெரிகிறது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments