இயற்கை விவசாயம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு
ஆரணியை அடுத்த குண்ணத்தூா், காமக்கூா் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
குண்ணத்தூா் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் பூ.ஷாலினி, மோ.ஷா்மிளா, சௌமியா, சுகந்திரி, சுஜிதா, சுமையா ஆகியோா் பங்கேற்று மாணவா்களிடையே இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதேபோல, காமக்கூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் பள்ளித் தலைமை ஆசிரியா் ரமேஷ்பாபு தலைமையில் பள்ளி மாணவா்களைக் கொண்டு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடத்தினா்.
Advertisement
இதில் மண்புழு உரத்தின் நன்மைகள், காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி, பாரம்பரிய நெல் வகைகள், ரசாயனமில்லாத பயிா் சாகுபடி முறை போன்றவைகளை விவசாயிகளிடமும் எடுத்துக் கூறினா்.
நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள், பள்ளி ஆசிரியா்கள், சமூக ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.