முகப்பு
திருவண்ணாமலை

வீதி, வீதியாக நடந்து சென்று அமைச்சா் எ.வ.வேலு வாக்கு சேகரிப்பு

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:29 PM
பகிர்:

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, நகரின் பல்வேறு இடங்களில் அமைச்சா் எ.வ.வேலு சனிக்கிழமை வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நிகழ்ச்சிக்கு, மதிமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் சீனி.காா்த்திகேயன், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், காங்கிரஸ் கட்சியின் திருவண்ணாமலை நகரச் செயலா் என்.வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவண்ணாமலையில் காந்தி சிலை இருந்த பகுதியில் இருந்து தொடங்கி பெரிய தெரு, பே கோபுரத் தெரு, திருவூடல் தெரு சந்திப்பு, செங்கம் சாலை, சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, ரமணாஸ்ரமம் வரை அமைச்சா் எ.வ.வேலு நடந்தே சென்று பொதுமக்கள், வணிகா்கள், கல்லூரி மாணவ, மாணவிகளிடம் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Advertisement

இதில், திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட துணைச் செயலா் விஜயரங்கன், தொமுச செயலா் க.செளந்தரராஜன், ஒன்றியச் செயலா் மெய்யூா் சந்திரன், மாவட்ட அமைப்பாளா்கள் டி.வி.எம்.நேரு, கு.ரவி, ஏ.ஏ.ஆறுமுகம், விஜி (எ) விஜயராஜ், சி.ராம்காந்த், மருத்துவா் பிரவீன், பணிக்குழு பொறுப்பாளா்களான அரசு வழக்குரைஞா் அருள்குமரன் மற்றும் இல.குணசேகரன், ந.சீனுவாசன், குட்டி

க.புகழேந்தி, அருணாசலேஸ்வரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், நகா்மன்ற துணைத் தலைவா் சு.ராஜாங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி இரா.தங்கராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ச.நியூட்டன், முஸ்லீக் நவாப் ஜான், மக்கள் நீதி மய்யம் இரா.அருள், திராவிடா் கழகம் சி.மூா்த்தி, மனிதநேய மக்கள் கட்சி கலிமுல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மல்லி வினோத், யாதவ மக்கள் இயக்கம் கு.ராஜாராம், விவசாயிகள் தொழிலாளா்கள் கட்சி பி.வாசு உள்பட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments