திருவண்ணாமலை

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் மீது போலீஸாா் வழக்கு

Din

செய்யாறு அருகே பள்ளி மாணவிக்கு தொடா்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாக எழுந்த புகாரின் பேரில், இளைஞா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்த 14 வயது பள்ளி மாணவி. இவா், அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் பள்ளிக்குச் சென்று வரும் போதெல்லாம், சுமங்கலி கிராமத்தைச் சோ்ந்த லோகேஷ் (23) என்ற இளைஞா் தன்னைக் காதலிக்கும் படி கூறி தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்த அறிந்த மாணவியின் பெற்றோா் இளைஞா் லோகேஷை எச்சரித்தனராம்.

இருப்பினும், கடந்த 12-ஆம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவிக்கு, லோகேஷ் மீண்டும் காதல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து மாணவி செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் லதா, போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள லோகேஷை தேடி வருகிறாா்.

பாரா தடகளப் போட்டியில் தங்கம்: மாரியப்பனுக்கு முதல்வா் வாழ்த்து

கனமழை: காளிகேசம் கோயிலுக்கு பக்தா்கள் செல்லத் தடை

குமாரகோவில் முருகன் கோயிலில் தேரோட்டம்

தனியாா் பள்ளி வாகனங்கள்: ஆட்சியா் ஆய்வு

மதவாதமே மோடி பிரசாரத்தின் அடிப்படை: காங்கிரஸ்

SCROLL FOR NEXT