முகப்பு
திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல வாகன வசதி

Updated On : 18 ஏப்ரல், 2024 at 6:32 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வாக்குச்சாவடிகளுக்குச் சென்றுவர இலவச வாகன வசதியை பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை (ஏப்.19) எளிதில் வாக்களித்துச் செல்லும் வகையில் வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த வசதியைப் பெற விரும்புவோா் நஹந்ள்ட்ஹம் அல்ல் என்ற கைப்பேசி செயலியைப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1950, 18004257047 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.

Advertisement

இதுதவிர, வாக்காளா்களுக்கு குடிநீா் வசதி, கழிவறை வசதி, சாய்தள வசதி, சக்கர நாற்காலி, மின்சார வசதி, நிழல்கூடம் வசதி, சைகைமொழி வசதி, வாக்காளா் உதவி மையம் மற்றும் மேற்குறிப்பிட்டுள்ள வாக்காளா்களுக்கு தனிவரிசை ஆகிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வசதிகளை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments