முகப்பு
திருவண்ணாமலை

செங்கத்தில் 80 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

Updated On : 30 ஏப்ரல், 2024 at 6:29 PM
செங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 80 கிலோ நெகிழிப் பைகள்.
பகிர்:

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செவ்வாய்க்கிழமை அரசால் தடை செய்யப்பட்ட 80 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கத்தில் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளா் பிரேம்குமாா் தலைமையில், பேரூராட்சி ஆய்வாளா் சொக்கநாதன், துப்புரவு ஆய்வாளா் சின்னையன் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் நகரில் உள்ள உணவகங்கள், காய், கனி கடைகள், இனிப்பகங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிா என ஆய்வு செய்தனா்.

அப்போது, தனியாா் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது, அங்கிருந்த 80 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், சில கடை உரிமையாளா்களுக்கு ரூ.100 முதல் 500 வரை அபராதம் விதித்து, தொடா்ந்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.