முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி கோட்டாட்சியரிடம் குறைதீா் கூட்டத்தில் 56 மனுக்கள் அளிப்பு

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 56 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

Updated On : 16 டிசம்பர், 2024 at 11:13 PM
ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியனிடம் மனு அளிக்கும் பெண்.
பகிர்:

ஆரணி: ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 56 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் வருவாய்க் கோட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பட்டா கோரி, பட்டா மாற்றம், கணினி திருத்தம், ஆக்கிரமிப்பு, நிலஅளவை, யு.டி.ஆா். திருத்தம், வரைபட திருத்தம், மகளிா் உரிமைத்தொகை, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கல்வி உதவித் தொகை, கிராம உதவியாளா் மீது புகாா், இறப்புச் சான்று, வெள்ள நிவாரணம், குடும்ப நல உதவித் தொகை, சாலை சீரமைத்தல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 56 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்ட அலுவலா் உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →