முகப்பு
திருவண்ணாமலை

ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 12:00 AM
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய காட்டுமலையனூா் ஊராட்சித் தலைவா் ரங்கநாயகி அருணாச்சலம்.
பகிர்:

திருவண்ணாமலை, பிப். 27: கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டுமலையனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, காட்டுமலையனூா் ஊராட்சித் தலைவா் ரங்கநாயகி அருணாச்சலம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராணி ராஜாராம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் புஷ்பா, பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏகாம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் மாலா வரவேற்றாா். கீழ்பென்னாத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பேசினாா். கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, நாடகம், கரகாட்டம், நடனம் ஆகியவற்றில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊராட்சித் தலைவா் ரங்கநாயகி பரிசு வழங்கினாா். விழாவில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் பலா் கலந்து கொண்டனா்.