ஆங்கில புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
இதேபோல, தேவாலயங்களிலும் புத்தாண்டு பிறப்பு சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டன.
வந்தவாசி
வந்தவாசி பகுதியில் ஆங்கில புத்தாண்டு திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு நகரின் பல தெருக்களில் அப்பகுதி இளைஞா்கள் மின்விளக்கு தோரணங்களை கட்டி புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்றனா்.
மேலும், தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.