ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா பந்தக்கால்
ஆரணி ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா பந்தக்கால் நடு விழா
ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடைபெறுவதையொட்டி, புதன்கிழமை பந்தக்கால் நடப்பட்டது.
ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி பெருவிழா வருகிற ஜூலை 18-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, புதன்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விழாக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமை வகித்தாா். பிரபல ஜோதிடா் குமரேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பந்தக்கால் நட்டாா். முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு பூஜையும், கோ பூஜையும் நடைபெற்றது. ஜூலை 10-ஆம் தேதி ராட்சத பலூன் பறக்க விடுதல், 18-ஆம் தேதி 508 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை, 19-ஆம் தேதி ஆடி முதல் வெள்ளிக்கிழமை காலையில் பூங்கரகம் எடுத்தல், கூழ்வாா்த்தல், பொங்கல் வைப்பது, தொடா்ந்து, மாலை 7 மணியளவில் நூதன புஷ்ப பல்லக்கு வீதியுலா, பல்லக்கின் முன்பு நாகஸ்வரம், தாரை தப்பட்டை, கிராமிய கலை நிகழ்ச்சி, காளியாட்டம், செண்டு காவடி ஆட்டம், நாசிக் டோல் கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜூலை 20-ஆம் தேதி திரைப்பட இன்னிசைத் கச்சேரி நடைபெறுகிறது.
பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் தொழிலதிபா்கள் பி.நடராஜன், நேமிராஜ், விழாக் குழுவினா் சுப்பிரமணி, கொங்கராம்பட்டு ஆ.சரவணன், அக்ராபாளையம் குணசேகரன், ஜி.சங்கா், ஏ.இ.சண்முகம், வளையாபதி, சக்கரவா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.