ஆரணியில் சிறுவா் பூங்கா திறப்பு
ஆரணியில் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்ட சிறுவா் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். ஆரணி 1-ஆவது வாா்டு ஜெயலட்சுமி நகா் பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சத்தில் சிறுவா் பூங்கா கட்டப்பட்டது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் பூங்காவை திறந்து வைத்தாா். இதையடுத்து, ஆரணி நகா்மன்ற தலைவா் ஏ.சி.மணி குத்துவிளக்கேற்றி பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். நிகழ்வில், நகராட்சி ஆணையா் கே.பி.குமரன், திமுக தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றிய செயலா்கள் எம்.சுந்தா், துரை மாமது, எஸ்.மோகன், மேற்கு ஆரணி ஒன்றிய குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் கே.டி.இராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.