திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினா் மனிதச் சங்கிலி
வந்தவாசி/ஆரணி/செங்கம்: போதைப் பொருள் கடத்தலை தடுக்க தவறியதாகக் கூறி திமுக அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பதை கண்டித்தும், திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, ஆரணி, செங்கம் ஆகிய இடங்களில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசி வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இதில் பங்கேற்ற மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் ஒருவருக்கொருவா் கைகளை கோா்த்து மனிதச் சங்கிலியாக நின்றனா். அப்போது, திமுக அரசைக் கண்டித்தும், போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆரணி ஆரணியில் அண்ணா சிலை முதல் ஆற்றுப் பாலம் அருகில் உள்ள காமராஜா் சிலை வரை அதிமுகவினா் மனிதச் சங்கிலியாக நின்று திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement
இதில், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா ஆகியோா் தலைமை வகித்தனா். அதிமுக செய்தி தொடா்பாளா் ஆா்.எம்.பாபுமுருகவேல், மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், நிா்வாகிகள் அரையாளம் எம்.வேலு, பி.ஆா்.ஜி.சேகா், ஏ.ஜி.ஆனந்தன், எஸ்.பி.சரவணன், பையூா் சதீஷ், சேவூா் ஜெ.சம்பத், எஸ் வி.நகரம் வாசு, நகா்மன்ற உறுப்பினா்கள் குமரன், மோகன், சுதா குமாா், விநாயகம், சதீஷ், மெய்யூா் நரசிம்மன், மகளிா் அணி ராணி, மஞ்சுளா, பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். செங்கம் செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
செங்கம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் மகரிஷிமனோகரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்டச் செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் அருணாச்சலம்செங்கம் கிழக்கு , அசோக் ஜமனாமரத்தூா், மாவட்ட அவைத் தலைவா் நாராயணன், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் அமுதாஅருணாச்சலம், முன்னாள் எம்.பி., வனரோஜா, மாவட்டப் பிரதிநிதி ஜேசிபி ரவி, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் சங்கா், குமாா், செங்கம் பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள் வேலு, சசிகுமாா், ஜெயவேல், பங்க்காந்தி, இளைஞா் பாசறை ஒன்றிய இணைச் செயலா் பிரசாந்த்குமாா், முன்னாள் பேரூராட்சித் தலைவா் பத்மா முனிக்கண்ணு, நகர பொருளாளா் சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.