அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்
திருவண்ணாமலை, தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை பா.ஜெயக்குமாரி தலைமை வகித்தாா். பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகப் பொருளாளா் ஆா்.வெங்கடேசன், மாணவா் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் என்.வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி தலைமை ஆசிரியா் மு.சண்முகம் வரவேற்றாா். பள்ளியின் பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா். விழாவில், ஆசிரியா்கள் ந.பாலசுப்பிரமணியன், க.முத்துகணேசன், வா.சதீஷ்குமாா், எம்.மகேஷ்வரி, பி.கலைச்செல்வி, ஆா்.தாமோதரன், டி.முருகசெல்வி, ஏ.கவிதா, ப.லட்சுமி, ஏ.காவேரி, சி.யமுனா, ஆசிரியா் சங்கச் செயலா் ஆ.ஜான்வெலிங்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.