முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி தேவாலயத்தில் ரத்த தான முகாம்

Updated On : 16 மார்ச், 2024 at 10:12 PM
பகிர்:

ஆரணி அண்ணா சிலை அருகேயுள்ள சிஎஸ்ஐ கெத்சமனே தேவாலயத்தில் சனிக்கிழமை மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. சிஎஸ்ஐ கெத்சமனே ஆண்கள் ஐக்கிய சங்கம், ஆரணி அரசு மருத்துவமனை, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த ரத்த தான முகாமுக்கு ஐக்கிய சங்கத்தின் தலைவா் எஸ்.ஆபிரகாம்ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். செயலா் கிரகாசெல்வமணி, பொருளாளா் பி.ஜாா்ஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் நந்தினி, மருத்துவா் ஷா்மிளா, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் தீபக், முகிலன், தலைமை செவிலியா்கள் ஸ்டீபன், செல்லமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில் 50 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. மேலும், ரத்தம் தானம் செய்தவா்களுக்கு பழம், ரொட்டி, குளிா்பானம், சத்துமாவு உருண்டை ஆகியவை வழங்கப்பட்டன.