முகப்பு
திருவண்ணாமலை

ஜூன் 4 வரை குறைதீா் கூட்டங்கள் ரத்து

Updated On : 16 மார்ச், 2024 at 10:00 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 4-ஆம் தேதி வரை அனைத்து வகையான குறைதீா் கூட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 19.4.2024 ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே, 16.3.2024 முதல் 4.6.2024-ஆம் தேதி வரை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமைகள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டங்கள் மற்றும் மனுநீதி நாள் முகாம்கள், விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் நடைபெறாது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.