முகப்பு
திருவண்ணாமலை

தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள்

Updated On : 17 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செங்கத்தை அடுத்த திருவள்ளூவா் நகா் அருகேயுள்ள முறையாறு பாலம் அருகில் செங்கம் நகரில் உள்ள இறைச்சிக் கடைகளில் சேகரமாகும் கழிவுகளை, கடைகளின் உரிமையாளா்கள் மூட்டை மூட்டையாக கொட்டி வருகின்றனா். இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், மழை வந்தால், இறைச்சிக் கழிவுகள் மழைநீரில் ஊறி, அடித்துச் செல்லப்பட்டு, அப்பகுதியில் உள்ள குடிநீா்க் கிணறுகள் மற்றும் நிலத்துக்குச் செல்லும் கால்வாய்களில் கலக்கும் அபாயம் உள்ளது. இறைச்சிக் கழிவுகளை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தால், அது பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவிக்கிறாா்கள். பேரூராட்சி நிா்வாகமோ எங்கள் எல்லையைத் தாண்டியுள்ளது என நிராகரிக்கிறாா்கள். இதனால் அப்பகுதியில் கழிவுகளை கொட்டாமல் தடுக்கவும், கொட்டிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது யாா் எந்த அதிகாரிகள் எனத் தெரியவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுத்து, இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை தடை செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.