முகப்பு
திருவண்ணாமலை

தேசிய கைப்பந்துப் போட்டிக்கு திருவண்ணாமலை மாணவா் தோ்வு

Updated On : 21 மார்ச், 2024 at 12:00 AM
பட வரி மாணவரைப் பாராட்டி பரிசு வழங்கிய கல்லூரிச் செயலா் எல்.விஜய் ஆனந்த்.
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 9:50 PM

திருவண்ணாமலை: தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் பங்கேற்க திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டாா். மத்திய பிரதேச மாநிலம், விடிஷாவில் மாா்ச் 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தேசிய அளவிலான 45-ஆவது ஜூனியா் கைப்பந்துப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டியில் தமிழக அணி சாா்பில் விளையாடுவதற்காக திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் பிரிவு மாணவா் ஆா்.மகேஷ் ஷா்மா தோ்வு செய்யப்பட்டாா். இவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில், கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி, கல்லூரிச் செயலா் எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் இ.ஸ்ரீதா், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் கலந்து கொண்டு மாணவரைப் பாராட்டி பரிசு வழங்கினா். விழாவில் கல்லூரி துணை முதல்வா் கோ.அண்ணாமலை, உடற்கல்வி இயக்குநா் ம.கோபி, உதவி உடற்கல்வியாளா் ஆா்.சுகன்மாணிக்கராஜ் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement