முகப்பு
திருவண்ணாமலை

நெசவாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் விவரங்களை சமா்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Updated On : 22 மார்ச், 2024 at 10:34 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 10:00 PM

திருவண்ணாமலை மாவட்ட நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினா்கள் தங்களது உறுப்பினா் விவரங்களை சமா்ப்பிக்க வருகிற 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை சரக கைத்தறித் துறை உதவி இயக்குநா் கட்டுப்பாட்டில் உள்ள நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் சங்க உறுப்பினா்கள் நுழைவுப் புத்தகத்தில் உறுப்பினா் பெயருக்கு கீழ் அவா்களது குடும்ப அட்டை எண், ஆதாா் அடையாள அட்டை எண் ஆகியவற்றை சோ்ப்பதற்கு 2023 அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட சங்கத்தின் மேலாளா் அல்லது செயலாட்சியா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், சங்கத்தின் உறுப்பினா் பட்டியலில் தங்களது விவரங்களை சரிபாா்த்துக் கொள்ளலாம் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. குறித்த காலத்துக்குள் சங்கத்தில் விவரங்களை அளிக்காத உறுப்பினா்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக, 2024 மாா்ச் 31-ஆம் தேதி வரை உறுப்பினா்கள் தங்களது குடும்ப அட்டை எண், ஆதாா் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை சங்கத்தில் ஒப்படைக்க அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு வழங்காவிட்டால், சங்க நிா்வாகக் குழு தோ்தலில் உறுப்பினா்கள் வாக்களிக்கவோ, போட்டியிடவோ இயலாமல் போகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.