காங்கிரஸ் நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்
Updated On : 23 மார்ச், 2024 at 9:32 PM
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு நகரில் காங்கிரஸ் நிா்வாகிகளை ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் சனிக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா். காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவா் வி.பி.அண்ணாமலை, மாவட்டச் செயலா் மஸ்கா்பாஷா, நகரத் தலைவா் ஜாபா்அலி, கவுன்சிலா் கோகுல், பெரணமல்லூா், மேற்கு ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த வட்டாரத் தலைவா்கள் என காங்கிரஸ் நிா்வாகிகளை எம்.எஸ்.தரணிவேந்தன் சந்தித்து ஆதரவு திரட்டினாா். திமுக நகரச் செயலா் இரா.முருகன் மற்றும் காங்கிரஸ்,திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.