முகப்பு
திருவண்ணாமலை

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

Updated On : 4 மே, 2024 at 4:06 PM
பகிர்:

மழை பெய்ய வேண்டி இஸ்லாமியா்கள் வந்தவாசியில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினா்.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கடுமையான கோடை வெயிலால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் மழை பெய்து வெப்பம் தணிய வேண்டி வந்தவாசி அக்பா் சாலையில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள் மற்றும் இஸ்லாமிய பெண்கள், ஆண்கள் பங்கேற்றனா்.