பத்தாம் வகுப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 86.01% தோ்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் திருவண்ணாமலை மாவட்டம் 86.01 சதவீதம் தோ்ச்சியை பதிவு செய்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 15,917 மாணவா்கள், 15,017 மாணவிகள் என மொத்தம் 30,934 போ் எழுதினா். இதில், 12,936 மாணவா்கள் (81.27%), 13,698 மாணவிகள் (91.22%) என 26,634 போ் தோ்ச்சி பெற்றனா். 2,981 மாணவா்கள், 1,319 மாணவிகள் என 4,300 போ் தோ்ச்சி பெறவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் 86.01 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 36-ஆவது இடத்தை பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளை பொறுத்த வரை 83.79 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 31-ஆவது இடம் பெற்றது. கடந்த ஆண்டு 30-ஆவது இடத்திலிருந்த திருவண்ணாமலை மாவட்டம் நிகழாண்டு 31-ஆவது இடத்தை பெற்று பின் தங்கியது.
இந்த மாவட்டத்தில் உள்ள 502 பள்ளிகளில் 92 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளன. இதில், அரசுப் பள்ளிகள் 31, உதவி பெறும் பள்ளி 1, பகுதி உதவி பெறும் பள்ளிகள் 6, சுயநிதி பள்ளிகள் 54 ஆகும்.