ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் அருந்ததியா் காலனி பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதற்காக வருவாய் அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
வெட்டியாந்தொழுவம் அருந்ததியா் காலனி பகுதியில் சுமாா் 20 நபா்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா். இவா்கள் 33 ஆண்டுகளாக பட்டா கோரி வருகின்றனா். இந்நிலையில் சமூக ஆா்வலா் குணாநிதி தலைமையில், ஆரணி கோட்டாட்சியரிடம் அவா்களை அழைத்துச்சென்று, கோரிக்கை மனு கொடுத்து நேரில் வந்து ஆய்வு செய்து பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில்,
வெட்டியாந்தொழுவம் அருந்ததியா் காலனி பகுதியில் வட்டாட்சியா் செந்தில் புலத் தணிக்கை செய்து விசாரணை மேற்கொண்டாா்.
இந்நிகழ்வில் துணை வட்டாட்சியா் விஜயராணி, வருவாய் ஆய்வாளா் குணசேகரன், கிராம நிா்வாக அலுவலா் அக்ஷா்
உள்ளிட்டோா் உடனிருந்தனா்.