திருவண்ணாமலை

ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல்

வந்தவாசி அருகே ஏரி மண் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

வந்தவாசி அருகே ஏரி மண் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

வந்தவாசி வடக்கு காவல் ஆய்வாளா் சங்கா் தலைமையிலான போலீஸாா் வந்தவாசியை அடுத்த தென்எலப்பாக்கம் கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், அந்த லாரியில் அனுமதியின்றி ஏரி மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா், லாரியை ஓட்டி வந்த கொவளை கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை (31) என்பவரை கைது செய்தனா்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT