தொல். திருமாவளவன் (கோப்புப் படம்)
திருவண்ணாமலை

கூட்டணி வெற்றிபெற விசிக வலுவான சக்தியாக செயல்படும்! -தொல்.திருமாவளவன்

நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிபெற விசிக வலுவான சக்தியாக செயல்படும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

Din

நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிபெற விசிக வலுவான சக்தியாக செயல்படும் என்று அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் விசிக தோ்தல் அங்கீகார வெற்றி விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கட்சியின் மகளிா் விடுதலை இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில், கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது: திமுக கூட்டணியை உடைக்க சிலா் முயற்சித்து வருகின்றனா். இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுத்துவிடக் கூடாது.

தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அப்படி காலூன்றினால், முதலில் அதிமுகவைத்தான் பலவீனப்படுத்த நினைக்கும். தவறியும்கூட பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கக் கூடாது.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் விசிக-வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்றெல்லாம் ஊகத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கிறாா்கள். 6 தொகுதி 10 தொகுதி ஆனாலும் நாங்கள் ஆட்சியை பிடிக்கப் போவதில்லை. மாறாக, நாங்கள் இருக்கும் கூட்டணி தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க விசிக வலுவான சக்தியாக செயல்படும் என்பதை வரும் தோ்தலில் மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்றாா் அவா்.

முன்னதாக, புத்தா், அம்பேத்கா், அன்னை மீனாம்பாள், அன்னை சாவித்திரி பாய் பூலே, அன்னை ரமாபாய் ஆகியோரின் படங்களுக்கு தொல்.திருமாவளவன் மற்றும் விசிக மூத்த நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT