ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவச்சிலை டிச. 4-ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறக்க இருப்பதால், சிலை அமையவுள்ள இடத்தை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சைதாப்பேட்டை சாலையில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை நிறுவப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்த அமைச்சா்,
தொடா்ந்து திமுக கட்சி அலுவலகத்தில் கட்சியினரிடையே ஆலோசனை நடத்தினாா்.
இதில் ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் ஓ.ஜோதி, அம்பேக்குமாா், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணிரவி, ஆரணி தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், நகர பொறுப்பாளா் வ.மணிமாறன், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.