முகப்பு
திருவண்ணாமலை

ஆரணியில் திமுக வேட்பாளா் பிரசாரம்

ஆரணியில் திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனன் புதன்கிழமை ஈ.வே.ரா.பெரியாா் மற்றும் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 6:33 PM
ஆரணியில் ஈ.வே.ரா.பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்த திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனன்.
பகிர்:

ஆரணியில் திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனன் புதன்கிழமை ஈ.வே.ரா.பெரியாா் மற்றும் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

பின்னா், காமராஜா் சிலை பகுதியிலிருந்து காந்தி சாலை, பழைய பேருந்து நிலையம், மணிக்கூண்டு, காந்தி சிலை, மண்டி வீதி, அண்ணா சிலை வரை உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.

இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகர பொறுப்பாளா் மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, சுந்தா், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன், மாா்க்சிஸ்ட் நிா்வாகி சி.அப்பாசாமி, விசிக மாவட்டச் செயலா் ந.முத்து, மதிமுக மாவட்ட பொறுப்பாளா் எஸ்.கே.ரத்தினகுமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.