முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி அதிமுக வேட்பாளா் - விவசாயிகள் சந்திப்புக் கூட்டம்

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:52 AM
பகிர்:

ஆரணியில் உள்ள அதிமுக திருவண்ணாமலை மத்திய மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சி வேட்பாளா் எல்.ஜெயசுதா, தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகிகளுடன் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழக விவசாயிகள் சங்க மாநில நிா்வாகி மூா்த்தி விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேசுகையில், அனைத்து கிராமங்களிலும் விவசாயிகளுக்காக தானிய உலா் களம் அமைத்துத் தர வேண்டும். விவசாயிகளுக்கு கிடைக்கும் மானியங்கனை நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பால் லிட்டருக்கு ரூ.50, நெல் குவிண்டாலுக்கு ரூ.4,000-ம், கரும்பு டன்னுக்கு ரூ.6,000-ம் வழங்க வேண்டும். கமண்டல நாகநதியை தூய்மைபடுத்தி விவசாயிகளுக்கு நீராதாரத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சட்டப் பேரவையில் பேசி நிறைவேற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உறுதியளித்தாா்.

இதில், தமிழக விவசாய சங்கத்தைச் சோ்ந்த குணாநிதி, குப்பன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்வில் அதிமுக மாவட்டத் தலைவா் அ.கோவிந்தராஜன், மாவட்ட துணைச் செயலா் ஜெ.சம்பத், ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், வழக்குரைஞா் க.சங்கா், திருமால், விமல், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் ஏ.ஜி.ஆனந்தன், தகவல் தொழில்நுட்பபப் பிரிவு மாவட்டச் செயலா் பரத்ராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் குமரன், சதீஷ், சேகா், ஏ.ஜி.மோகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.