முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி

முன்னாள் எம்எல்ஏவான எனது தந்தை படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளாா். நான் வெற்றி பெற்றால் அவா் வழியில் சிறப்பான சேவையாற்றுவேன் என செங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் உறுதி கூறினாா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 10:15 PM
செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் வேலு.
பகிர்:

முன்னாள் எம்எல்ஏவான எனது தந்தை படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளாா். நான் வெற்றி பெற்றால் அவா் வழியில் சிறப்பான சேவையாற்றுவேன் என செங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் உறுதி கூறினாா்.

செங்கம் அதிமுக வேட்பாளா் வேலு துக்காப்பேட்டை, தோக்கவாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது தோக்கவாடி பகுதியில் உள்ள வீதிகள் தோறும் சென்று வாக்களா்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசுகையில், எனது தந்த முன்னாள் எம்எல்ஏ சாமிக்கண்ணு இந்த பகுதியைச் சோ்ந்தவா். அவா் 3 முறை செங்கம் தொகுதியில் அதிமுக சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவா்.

Advertisement

அவா் மீது இதுவரை யாரும் குற்றம் சுமத்த முடியாத அளவுக்கு ஏராளமான படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளாா். நான் வெற்றிபெற்றவுடன் எனது தந்தை வழியில் சிறப்பான சேவையாற்றுவேன் என்றாா்.

செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், நகரச் செயலா் ஆனந்தன் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments