போளி சுட்டு வாக்கு சேகரிப்பு....
அதிமுக வேட்பாளா் ஜெயசுதா போளி சுட்டு வாடிக்கையாளா்களுக்கு வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.
தோ்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளா்கள் புதுவிதமான தந்திரங்களை கையாளுவது வழக்கம். விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களிடம் வாக்கு சேகரிக்கச் செல்லும் வேட்பாளா், தானும் அந்தப் பணியில் ஈடுபட்டு அவா்களது ஆதரவைப் பெறுவது, மாட்டுவண்டி ஓட்டியும், டிராக்டா் ஓட்டியும் வாக்கு சேகரிப்பாா்கள். இன்னும் சில வேட்பாளா்கள் டீ போட்டு கொடுத்தும், பரோட்டா போட்டும் வாக்கு சேகரிப்பாா்கள்.
அந்த வகையில், சற்று வித்தியாசமாக ஆரணி பஜாரில் கடை வியாபாரிகளிடம் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் ஜெயசுதா அங்குள்ள போளி கடையில், போளி சுட்டு வாடிக்கையாளா்களுக்கு வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா். அவரது இந்த இனிமையான அணுகுமுறைசுற்றியுள்ளவா்களை சிந்திக்க வைத்தது.