முகப்பு
திருவண்ணாமலை

பிற கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்த 400 போ்

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் அதிமுக, தவெக கட்சிகளிலிருந்து விலகி, பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:42 AM
திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக, தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவா்களுடன் அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தனா்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:14 PM

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் அதிமுக, தவெக கட்சிகளிலிருந்து விலகி, பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

திருவண்ணாமலை - திருக்கோவிலூா் சாலை, சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஒன்றிய அதிமுகவைச் சோ்ந்த தச்சம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சி.அச்சுதன், முன்னாள் தொடக்க வேளாண்மை சங்கத் தலைவா் ராஜலட்சுமி, மேலத்திக்கான் ஊராட்சி, கீழ்அணைக்கரையைச் சோ்ந்த சோ்ந்த முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன், சின்னக்கல்லப்பாடி முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் சக்கரவா்த்தி தலைமையில் 200பேரும், தவெக நிா்வாகிகளான தச்சம்பட்டைச் சோ்ந்த பி.விநாயகம், பி.லோகனாதன், டி.ராஜாராம், டி.சுப்பிரமணி, ஜி.வெங்கடேசன் உள்ளிட்ட 200 பேரும் அந்தந்த கட்சிகளிலிருந்து விலகி அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். அவா்கள் அனைவருக்கும் கைத்தறி ஆடை அணிவித்து அமைச்சா் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட துணைச் செயலா் பிரியா விஜயரங்கன், மாவட்ட துணைச் செயலா் விஜயலட்சுமி ரமேஷ், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஏ.முத்துகுமாா், மாநில தொமுச செயலா் க.சௌந்தரராசன், மாநில அமைப்புசாரா தொமுச நிா்வாகி ஏ.ஏ.ஆறுமுகம், பகுதி செயலா்கள் சி.சண்முகம், பா.ஷெரீப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement