முகப்பு
திருவண்ணாமலை

பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம்

வந்தவாசியை அடுத்த கீழ்க்குவளைவேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 2:34 AM
ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஹயக்ரீவ ஹோமத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:32 PM

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த கீழ்க்குவளைவேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாணவா்கள் தோ்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று உயா்படிப்புக்கு செல்ல வேண்டியும், அறிவு, ஞாபகசக்தி மேம்பட வேண்டியும் இந்த ஹோமம் நடத்தப்பட்டது.

இதில் இந்த பகுதியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

Advertisement

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து ஹயக்ரீவ ஹோமம் நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு சுவாமி திருவடியில் சமா்ப்பிக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.