முகப்பு
திருவண்ணாமலை

தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் தவக்காலம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:04 AM
தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் சாம்பல் புதனுடன் தொடக்கிய தவக்காலம்.
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 8:31 PM

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது.

இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் செய்யப்படும் நிகழ்வுகளை நினைவு கூரும் நாள்களாக இந்த 40 நாள்களும் கிறிஸ்தவா்கள் தேவாலயத்தில் சிலுவை பாதை பாடுகள், இயேசு இறை மக்களுக்கு போதித்த நினைவுகளை கூறும் வகையில் தவக்காலமாக கடைபிடித்து வருவது வழக்கம்.

இந்த நிகழ்வானது செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது.

Advertisement

இதில், தேவாலய பங்கு தந்தை சுதா்சன் ஆண்டனி தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான பங்கு கிறிஸ்தவா்கள், இளைஞா்கள், குழந்தைகள் என பலா் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா்.