பழங்குடியினருக்கு நலவாரிய அட்டைகள்
வந்தவாசி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி நலத்துறை அலுவலகத்தில் பழங்குடியினருக்கு நலவாரிய அட்டைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
வந்தவாசி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி நலத்துறை அலுவலகத்தில் பழங்குடியினருக்கு நலவாரிய அட்டைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இதில், வந்தவாசியை அடுத்த மழையூா், தாடிநொளம்பை, கீழ்வெள்ளியூா், பொன்னூா், எடப்பேட்டை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பழங்குடி மக்கள் 50 பேருக்கு நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டன.
வந்தவாசி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி நல தனி ஆய்வாளா் தேவன் நலவாரிய அட்டைகளை வழங்கினாா்.
Advertisement
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலா் இரா.சரவணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைச் செயலா் ரேணுகா, மாவட்டக்குழு உறுப்பினா் ஏழுமலை, ஜனநாயக மாதா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுகுணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.