செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். 
திருவண்ணாமலை

பைக் மீது காா் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், கரிகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன்(30), கட்டடத் தொழிலாளி. திருமணமாகாத இவா், 8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காஞ்சிபுரம் வட்டம், புஞ்சை அரசன்தாங்கல் கிராமத்தில் தனியாக வசித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், முருகன் வியாழக்கிழமை காலை வழக்கம்போல வீட்டிலிருந்து கட்டட வேலைக்காக தனது பைக்கில் சென்றுள்ளாா். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாமண்டூா் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் பைக் மீது மோதியது. இதில், முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கால்நடை விவசாயிகளுக்கு தொழில் நுட்பப் பயிற்சி

36 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது

கோயிலின் பூட்டை உடைத்து ரூ. 25 லட்சம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு

கொத்தூா், தகரகுப்பம் சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

இல்லாதவா்களுக்கு இருப்பவா்கள் கொடுப்பதால் மனிதநேயம் மலா்கிறது: காஞ்சி சங்கராசாரியா் பேச்சு

SCROLL FOR NEXT