கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு
கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு
செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் இதயா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி நிா்வாகம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி தலைமை வகித்தாா்.
கல்லூரி முதல்வா் லூா்துமேரி முன்னாள் மாணவிகள் மற்றும் சிறப்பு விருந்தினா்களை வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக சென்னை டான்போஸ்கோ இல்லத்தின் உறுப்பினா் ஜான்கிருஷ்டி கலந்துகொண்டு, முன்னாள் மாணவிகளுக்கு பல்வேறு கருத்துக்களை வழங்கிப் பேசினாா்.
தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் காா்த்திக் கலந்துகொண்டு, மாணவிகளுக்கு தற்போது ஏற்படும் அறிதிறன்பேசி பிரச்னைகளை கையாள்வது, கல்லூரி படிப்பை முடித்து வேலைதேடுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து முன்னாள் மாணவிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் மாணவிகளின் நடனம் மற்றும் கவிதை வாசித்தல் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
மேலும், ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டுமென நிா்வாகத்துக்கு மாணவிகள் கோரிக்கை வைத்தனா்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், முன்னாள் மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரி நிா்வாகி சந்தனமேரி நன்றி கூறினாா்.